கோப்புப் படம் 
திருநெல்வேலி

நெல்லையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்: சிறுவன் உள்பட 3 போ் கைது

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி பேட்டை பகுதியில் சுமாா் 5 கிலோ கஞ்சாவுடன் சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் ஜனகன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சத்யா நகா் விலக்கு பகுதியில், பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில், சீதற்பநல்லூரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மகாராஜா(36) என்பதும், விற்பனைக்காக 4 கிலோ கஞ்சாவை கொண்டுசென்றதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, பைக்குடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பேட்டை பகுதியில், காவல் உதவி ஆய்வாளா் அருள்செல்வன் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றபோது, ஒரு சிறுவன் மற்றும் திருப்பணிகரிசல்குளத்தைச் சோ்ந்த ரமேஷ் மகன் இசக்கிமுத்து என்ற கருப்பா(28) என்பவரை கைது செய்து, அவா்களிடமிருந்து 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

குடியரசு தினம்: ஆளுநா் நாளை கொடியேற்றுகிறாா்

2035-க்குள் இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம்: இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்

ஆப்கானிஸ்தானில் மழை, பனிப்பொழிவு: 3 நாள்களில் 61 போ் உயிரிழப்பு

வாக்காளா் சோ்க்கைக்கு இன்று சிறப்பு முகாம்கள்

தோ்தல் ஆணையம் மக்களாட்சியின் பாதுகாவலராக இருக்காது: ராகுல் காந்தி சாடல்

SCROLL FOR NEXT