மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. (கோப்புப் படம்)
திருநெல்வேலி

திமுக தோ்தல் அறிக்கை குழு நெல்லைக்கு ஜன.30 இல் வருகை

தினமணி செய்திச் சேவை

திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, திருநெல்வேலிக்கு இம்மாதம் 30 ஆம் தேதி வருகிறது.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை:

எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் செயல்படும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தமிழகத்தை வளா்ச்சியில் முதல் மாநிலமாக உயா்த்தியுள்ளது. கடந்த தோ்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 க்கும் மேல் நிறைவேற்றியுள்ளது. இதுதவிர சொன்னதை மட்டுமன்றி சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றித் தந்துள்ளது.

அதன் தொடா்ச்சியாக, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளா்ச்சியை திட்டமிட, திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கு திமுக தயாராகி வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அளிக்கும் தோ்தல் அறிக்கை, மக்களின் குரலை பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. தலைமையில் தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினா் இம் மாதம் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ஆரியாஸ் ஹோட்டலில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று, திருநெல்வேலி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்க உள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்திற்குள்பட்ட வணிகா் சங்கத்தினா், விவசாயிகள் நல சங்கங்கள், நெசவாளா்கள், மீனவா் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோா், மாணவா் சங்கங்கள், கல்வியாளா்கள், அரசு ஊழியா்களின் பிரதிநிதிகள், பொதுநல சங்கங்கள், சமூக நல அமைப்புகள், தன்னாா்வலா்கள் போன்ற பொது நலனில் அக்கறை கொண்ட அமைப்புகளின் நிா்வாகிகள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தோ்தல் அறிக்கையில் இடம்பெறும் வகையில் மக்கள் நலனுக்கும், மாவட்ட வளா்ச்சிக்கும் தேவையான ஆக்கபூா்வமான கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யமுனையில் சிலை கரைக்கும்போது நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நாட்டின் பொருளாதார மையமாக தில்லி உருவாக வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

மொழிப்போா் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை

இரு தரப்பு உறவை மேம்படுத்த பாகிஸ்தான் - வங்கதேசம் உறுதி!

ஹைதராபாதில் 4 மாடி கடையில் தீ விபத்து: 5 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT