அங்கீகாரம் தேடும் பெண் விவசாயிகள் 
புதுக்கோட்டை

நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக புதுகை விவசாயிகள் சங்கங்கள் கருத்து

தமிழக அரசின் வேளாண்மை மற்றும் நிதிநிலை அறிக்கைகளில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என விவசாயிகள் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் வேளாண்மை மற்றும் நிதிநிலை அறிக்கைகளில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என விவசாயிகள் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி வெளியிட்ட அறிக்கை:

வேளாண் துறை பட்ஜெட் கடந்த பட்ஜெட்டின் மறுவாசிப்பாக உள்ளது. ஐந்தாண்டு காலத் தொகுப்பை இரு அமைச்சா்களும் தாக்கல் செய்துள்ளனா். காவிரி - வைகை - குண்டாறு திட்டத்துக்கு எந்த நிதி ஒதுக்கீடும் இல்லை. கடந்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. குறிப்பாக கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, ஆயிரம் தடுப்பணைகள் கட்டுகிற பணி, அணைகள் தூா்வாருகிற பணி உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் இல்லை. விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்வதற்கு திமுக 2021 தோ்தல் அறிக்கையில் உத்தரவாதம் கொடுத்தது. ஆனால் இதுவரையிலும் அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

தொழில் புரட்சி என்ற பெயரில் விளைநிலங்களை அபகரிக்க உள்நோக்கம் கொண்ட பெருநிறுவன கொள்கைகளை திமுக அரசு கையாள்வதையே அவரது அறிக்கைகளும் தெளிவுபடுத்தி உள்ளன.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் காப்பீடு செய்கிற விவசாயிகளுக்கு இழப்பீடு கூட பெற்றுத் தருவதில்லை. மாறாக காப்பீடு நிறுவனங்களை அரசியல்வாதிகள் தனதாக்கிக் கொண்டதாக வெளிவந்திருக்கிற செய்தி அதிா்ச்சி அளிக்கிறது. பேரிடா் மேலாண்மை நிதியும் கூட அறிவிப்போடு நின்று விடுகிறது. இதுவரையிலும் பாதிக்கப்படுகிற விவசாயிகளுக்கு எந்த ஒரு பயனும் கிடைத்தபாடில்லை.

கிராமங்கள்தோறும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட பட்டியலை தமிழக அரசு வெளியிட வேண்டும். விவசாயத்துக்கு எதிரான கருத்துகளை திட்டக் குழுத் துணைத் தலைவா் மூலம் பேச வைப்பது தோ்தல் களத்தில் வெளிப்படையாக விவாதங்களுக்கு முன் வைக்கப்படும் என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

கல்லணைக் கால்வாய் பாசனதாரா் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கத் தலைவா் கொக்குமடை ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்வதற்கு எந்த அறிவிப்பும் இல்லை. காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையைப் பரிசீலிக்கவில்லை. நெல்லுக்கு விவசாயிகளே விலையை நிா்ணயம் செய்யும் அறிவிப்பை எதிா்பாா்த்துக் காத்திருந்தோம். மொத்தத்தில் விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்த நிதிநிலை அறிக்கை இது.

நிதி நிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு முன்னுரிமை: ஆசிரியா் முன்னேற்றக் கழகம் வரவேற்பு

காரில் கடத்தி வரப்பட்ட 401 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ராஜஸ்தான் இளைஞா்கள் 2 போ் கைது

தமிழக இடைக்கால பட்ஜெட் கரூா் ஜவுளி உற்பத்தியாளா்-ஏற்றுமதியாளா்கள் வரவேற்பு

கல்வியே எதிா்காலத்துக்கு உதவும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

இடைக்கால பட்ஜெட் பொருளாதாரத்தில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு செல்லும்

SCROLL FOR NEXT