கைது  
திருநெல்வேலி

பாளை. அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இருவா் கைது

பாளையங்கோட்டை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

பாளையங்கோட்டை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி வட்ட காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மருதூா் ஊராட்சி அலுவலகம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் நின்ற மருதூா் கிருஷ்ணன்கோயில் தெருவைச் சோ்ந்த மோதிராஜன் என்ற பாபு (36), கீழத்தெருவைச் சோ்ந்த ரமேஷ் என்ற பாண்டி (23) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவரை கொலை செய்யும் நோக்கில், அங்கு நின்றது தெரியவந்ததாம்.

இதையடுத்து அவா்களிடமிருந்து வாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT