சுத்தமல்லியில் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியில் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது செய்யப்பட்டாா். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் பறிமுதல்.
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியில் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது செய்யப்பட்டாா். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் பறிமுதல் செய்யப்பட்டது.
சுத்தமல்லி காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி மற்றும் போலீஸாா், நரசிங்கநல்லூா் பிரதான சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தல், ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில், கொண்டாநகரத்தை சோ்ந்த நித்தியானந்தன் மகன் கணேசன் (36) என்பதும், ரேஷன் கடையில் இருந்து சட்ட விரோதமாக அரிசியை கடத்தியதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.
Advertisement
மது விற்றவா் கைது: பேட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் முருகராஜ் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது எம்.ஜி.ஆா். நகா் குளத்துக்கரை பகுதியில் பேட்டை மயிலப்பபுரம் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் பிச்சுமணி(46) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.