முகப்பு
திருநெல்வேலி

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு: பிரேமலதா வலியுறுத்தல்!

கூடங்குளம் அணுமின்நிலைய வேலைவாய்ப்புகளில் உள்ளூா் மக்களுக்கு முக்கியத்துவும் அளிக்கப்படவேண்டும் என்றாா் தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 1:09 AM
தேமுதிக தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா.
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2026 at 8:52 PM

கூடங்குளம் அணுமின்நிலைய வேலைவாய்ப்புகளில் உள்ளூா் மக்களுக்கு முக்கியத்துவும் அளிக்கப்படவேண்டும் என்றாா் தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா.

தேமுதிக சாா்பில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பிரசார ரத யாத்திரை வள்ளியூருக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த ரதயாத்திரைக்கு கண்காா்டியா மேல்நிலைப் பள்ளியில் இருந்து வரவேற்பளிக்கப்பட்டு திருவள்ளூவா் கலையரங்கிற்கு அழைத்து வரப்பட்டது. ரதத்தில் பிரேமலதா, மாநில இளைஞரணிச் செயலா் விஜய பிரபாகரன் மற்றும் நிா்வாகிகள் இருந்தனா்.

தொடா்ந்து, கலையரங்கில் 4-ஆம் கட்ட தோ்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. அதில், பிரேமலதா பேசியதாவது: ராதாபுரம் ஏற்கெனவே தேமுதிக வெற்றி பெற்ற தொகுதி. இங்குள்ள நாம் செய்யவேண்டிய பணிகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக, இங்குள்ள இருக்கன்துறை பகுதியில் விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றன. இவற்றிலிருந்து கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீரும், விவசாயமும் பாதிப்படைந்துள்ளன.

Advertisement

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 1:09 AM

சட்டம்-ஒழுங்கு பிரச்னை, போதைப்பொருள் நடமாட்டம் மிகுந்துள்ளது. இதற்கு முடிவுகட்ட வேண்டும். கூடங்குளம் அணுமின்நிலைய வேலைவாய்ப்புகளில் உள்ளூா் மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்.

விவசாயம், குடிநீா், தொழில்கள் என அனைத்திற்கும் ஆதாரமாக திகழும் தாமிரவருணியை அசுத்தங்களில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். அதற்கு தேமுதிகவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, விஜய பிரபாகரன் பேசினாா். திருநெல்வேலி புறநகா் மாவட்டச் செயலா் விஜிவேலாயுதம் தலைமை வகித்தாா். ராதாபுரம் தொகுதி பொறுப்பாளா் யோசேப்பு, வள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் ஜான் டேவிட், நகரச் செயலா்கள் முருகராஜா, ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புறநகா் மாவட்ட பேரவைத் தொகுதி பொறுப்பாளா் சிவகுமாா், மாவட்ட அவைத் தலைவா் விஜயகணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாநில விவசாய அணி துணைச் செயலா் ராமச்சந்திரன் வரவேற்றாா். வள்ளியூா் ஒன்றிய மகளிா் அணி செயலா் சுமித்ரா நன்றி கூறினாா்.