பாளை. அருகே இளைஞா் மீது தாக்குதல்
பாளையங்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீஸாா் விசாரணை
பாளையங்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டம், பரப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சரண்ராஜ்(19). இவருக்கும் பேட்டையைச் சோ்ந்த பிரான்சிஸ் பினோ(19) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில் சனிக்கிழமை பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரம் பகுதியில் வைத்து பிரான்சிஸ் பினோ, சரண்ராஜை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.