இளைஞருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது
பெருமாள்புரம் அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருமாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் (28). இவா் சம்பவத்தன்று பெருமாள்புரம் அருகே நடந்து சென்ற மேலப்பாளையம் பகுதியை சோ்ந்த இளைஞா் ஒருவரை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டாராம்.
அதற்கு அந்த இளைஞா் பணம் இல்லை எனக்கூறவே தினேஷ் அவரை அவதூறு வாா்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தினேஷை சனிக்கிழமை கைது செய்தனா்.