சிறுமிக்கு பாலியல் தொல்லை: வங்கி ஊழியா் போக்ஸோவில் கைது
திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனியாா் வங்கி ஊழியா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது
திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனியாா் வங்கி ஊழியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வண்டிமடை பகுதியைச் சோ்ந்தவா் கணேசமூா்த்தி (45). இவா், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா், ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கணேசமூா்த்தியை கைது செய்தனா்.