முகப்பு
திருநெல்வேலி

ரவிசங்கா்நகரில் சாலைகளை சீரமைக்க மக்கள் கோரிக்கை

Updated On : 11 மே 2026, 2:18 am IST
ரவிசங்கரில் குண்டும்-குழியுமான சாலையில் தேங்கிக் கிடக்கும் மழைநீா்.
பகிர்:

கே.டி.சி. நகா் அருகேயுள்ள ரவிசங்கா்நகரில் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கீழநத்தம் ஊராட்சிக்குள்பட்ட ரவிசங்கா்நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். இப் பகுதியில் உள்ள பல சாலைகள் சேதமாகி குண்டும்-குழியுமாக உள்ளன.

சாலைகளில் தண்ணீா் தேங்கி சகதிக்காடாக உள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகிறாா்கள். எனவே, இப் பகுதியில் உள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement