முகப்பு
கன்னியாகுமரி

ஆசிய சிலம்பம்: ஜூனியர் பிரிவில் இந்தியா சிறப்பிடம்

ஆசிய சிலம்ப சம்மேளனம் சார்பில் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பப் போட்டியின் ஜூனியர் பிரிவில் இந்தியா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Updated On : 13 மே 2013, 1:57 am IST
பகிர்:

ஆசிய சிலம்ப சம்மேளனம் சார்பில் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பப் போட்டியின் ஜூனியர் பிரிவில் இந்தியா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

 மலேசியாவில் உள்ள தரங்கானோ நகரில் இப் போட்டிகள் நடைபெற்றன. இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, சீனா, நேபாளம் உள்பட 14 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

 சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் இந்திய அணி சார்பில் 46 வீரர்கள் பங்கேற்றனர். சீனியர் பிரிவில் மலேசிய அணியும், ஜூனியர் பிரிவில்

Advertisement

Advertisement

இந்திய அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன.

 போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு ஆசிய சிலம்பாட்டக் கழக துணைத் தலைவர் ஜே.ஜே.ஆர். ஜெஸ்டின் பரிசுகளை வழங்கினார். இந்திய அணியின் மேலாளராக ஆசிய சிலம்பாட்டக் கழக பொதுச் செயலர் களரி.பி. செல்வராஜ், பயிற்சியாளராக சுதாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.