தக்கலை மற்றும் கொற்றியோடு அஞ்சல் நிலையங்களில் பணம் கையாடல் செய்ததாக பெண் ஊழியர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்கலை அஞ்சல் நிலைய உதவிக் கண்காணிப்பாளர் சுரேஷ், காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனு:
புலியூர்குறிச்சியைச் சேர்ந்த சந்திரகலா (30) தக்கலை அஞ்சல் நிலையத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தபோது, பொதுமக்கள் செலுத்திய ரூ.44,206-ஐ கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அலுவலக உயர் அதிகாரிகள் விசாரித்த போது ரூ.30 ஆயிரத்தை செலுத்தினார்.
மீதியுள்ள ரூ.14,206-ஐ அவர் செலுத்தவில்லை. அவரிடமிருந்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து தக்கலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இதே போல் சுரேஷ், கொற்றியோடு காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனு:
தக்கலை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி மணலிக்கரை அஞ்சல் நிலையத்தில் பணியாற்றிய போது பொதுமக்கள் செலுத்திய சிறுசேமிப்பு மற்றும் தொடர்வைப்புத் தொகை ரூ. 1,72,979-ஐ கணக்கில் காட்டாமல் கையாடல் செய்துள்ளார். அதை வசூல் செய்து தருமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கொற்றியோடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.