கன்னியாகுமரி

இந்தியாவில் 30% பேருக்கு இருதய நோய் பாதிப்பு: மருத்துவக் கல்லூரி முதன்மையர் தகவல்

DIN

இந்தியாவில் 30 சதவீதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி முதன்மையர் ரவீந்திரன் தெரிவித்தார்.

உலக இருதய தினத்தை முன்னிட்டு, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசியது: இருதய நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக இருதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 30 சதவீதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருதய நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணி அதிக உணர்ச்சி வசப்படுதலாகும். அதை தவிர்க்க வேண்டும். மேலும், உடல் உழைப்பு, உணவுக் கட்டுப்பாட்டின் மூலமும் இருதய நோயை தவிர்க்கலாம். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. அரிசி உணவை குறைத்துக் கொண்டு சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றார் அவர்.

முன்னதாக இருதய நோய் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது, இதில் மருத்துவக் கல்லூரி மாணவிகள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT