கன்னியாகுமரி

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் நவீன சிறுநீரக சிகிச்சை பிரிவு திறப்பு

DIN

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் நவீன சிறுநீரக சிகிச்சை பிரிவை விஜயகுமார் எம்.பி. ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். புதிதாக திறக்கப்பட்டுள்ள சிறுநீரக சிகிச்சை பிரிவில் நவீன டயாலிசிஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 16 பேருக்கு டயாலிசிஸ் செய்யலாம்.  நிகழ்ச்சியில், மருத்துவர்கள் லியோடேவிட், பத்மகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக விஜயகுமார் எம்.பி. சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் கட்டப்பட்டிருந்த அன்னதான தர்ம மண்டபத்தை திறந்து வைத்தார்.  நிகழ்ச்சிக்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். இதில், பையன்ராஜா,  மாவட்ட அதிமுக துணைச் செயலர் ஞானசேகரன்,  மீனவர் கூட்டுறவு இணையத் தலைவர் சகாயம்,  ஜெயலலிதா பேரவைத் தலைவர் கனகராஜன்,  ஒன்றியச் செயலர்கள் சந்தையடி பாலகிருஷ்ணன்,  ராஜரத்தினம், ஆல்பர்ட்சிங்,  நாகர்கோவில் நகரச் செயலர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெம்போவில் ராகுல் காந்தி!

அழகிய தமிழ்மகள்! ஸ்ரேயா..

முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

உதகை மலை ரயில் இன்று ரத்து!

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

SCROLL FOR NEXT