கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கொடை விழா இன்று தொடக்கம்

DIN

ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் ஆடி கொடை விழா திங்கள்கிழமை (ஆக.14)  தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஆக.15) நிறைவு பெறுகிறது.
கோயில் கொடைவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்கார தீபாராதனை,  நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை,  அம்மனுக்கு மாகாப்பு சாத்துதல்,  மாலை 6 மணிக்கு இசக்கியம்மன் பக்தர்கள் மகளிர் மன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை,  இரவு 7 மணிக்கு மாகாப்பு பூஜை, தீபாராதனை ஆகியன நடைபெறுகின்றன.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம்,  காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.
பிற்பகல் 1 மணிக்கு உச்சிகாலபூஜை,  மாலை 5 மணிக்கு பக்தி இசை,  இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரி,  இரவு 7.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை,  இரவு 11 மணிக்கு பூப்படைப்பு சிறப்பு தீபாராதனை,  அம்மனுக்கும், சுவாமிக்கும் பூப்படைப்பும் நள்ளிரவு 12 மணிக்கு ஊட்டு படைப்பும் தொடர்ந்து பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை உதவி ஆணையர் வெங்கடேஷ், செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT