கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அருகே மரங்கள் வெட்டிக் கடத்தல்

DIN

பேச்சிப்பாறை சமத்துவபுரத்தில் அரசு புறம்போக்கு பகுதியில் நின்றிருந்த அயனி மரங்களை ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கடத்திய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். 
பேச்சிப்பாறை சமத்துவபுரம் பகுதியில் அரசு புறம்போக்கு பகுதியில் முதிர்ந்த அயனி மரங்கள் உள்பட ஏராளம் மரங்கள் நிற்கின்றன. தற்போது ஓக்கி புயல் நிவாரணப் பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இங்கு நின்ற லட்சக்கணக்கான  ரூபாய் மதிப்புள்ள  மூன்று மரங்களை அப்பகுதியைச் சேர்ந்த  கும்பல் வெட்டியுள்ளது. 
இதில் இரண்டு மரங்களை அக்கும்பல் கடத்தியுள்ளது.  இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் நவநீத கிருஷ்ணன் பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து கும்பலை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT