புதுக்கடை அருகே கடையில் பணம், செல்லிடப்பேசி திருட்டு
புதுக்கடை அருகே டைல்ஸ் கடையிலிருந்து பணம் மற்றும் செல்லிடப் பேசியை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
புதுக்கடை அருகே டைல்ஸ் கடையிலிருந்து பணம் மற்றும் செல்லிடப் பேசியை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
நித்திரவிளை அருகேயுள்ள வாவறை பகுதியைச் சேர்ந்தவர் எட்வின்ராஜ் (36). இவர் கடந்த 6 வருடங்களாக புதுக்கடை பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். அவர் செவ்வாய்க்கிழமை இரவு கடை பூட்டிவிட்டு வீட்டு வந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கடையினுள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ. 20 ஆயிரம் பணத்தையும், ஒரு செல்லிடப்பேசியையும் திருடிச் சென்றுள்ளனர். புதன்கிழமை கடைக்கு சென்றபோது அங்கிருந்த பணம், செல்லிடப்பேசி திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து எட்வின்ராஜ் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.