கன்னியாகுமரி

23 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள்

DIN

நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 23 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர்  சஜ்ஜன்சிங் ரா. சவாண் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர்   தலைமையில்,  லூயி பிரெய்லி கூட்ட அரங்கில் நடைபெற்றது.  
இதில்,  கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் கை, கால் குறைபாடுடையோர் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட 23 மாற்றுத் திறனாளிகளுக்கு, ரூ. 91,080 மதிப்பிலான, மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்களை ஆட்சியர்  வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்  சோ. இளங்கோ,  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சி. நடராஜன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்  பிரம்மநாயகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT