கன்னியாகுமரி

கொட்டாரம் கோயிலில் ஏப்.4, 5-இல் ராம நவமி விழா

DIN

கொட்டாரம் ஸ்ரீராமர் கோயிலில் ராம நவமி விழா ஏப்ரல் 4, 5ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதையொட்டி 4ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு அபிஷேகம், காலை 7.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 5.45 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு பரதநாட்டியம், இரவு 9.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியன நடைபெறும்.5ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு கலச பூஜை, காலை 6 மணிக்கு அபிஷேகம், காலை 7 மணிக்கு பால்குடம் ஊர்வலம், காலை 8.50 மணிக்கு சிறப்பு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 11.15 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவு ஆகியவற்றைத் தொடர்ந்து பரிசுகள் வழங்கப்படும்.  இரவு 8.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 10 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியன நடைபெறும்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஸ்ரீராமர் கோயில் பக்தர்கள் சங்கம், ஸ்ரீராமர், ஸ்ரீ அனுமன் ஆன்மிகப் பண்பாட்டு கல்வி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT