முகப்பு
கன்னியாகுமரி

தக்கலையில் இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடையில் சர்க்கரை விலையை உயர்த்திய மத்திய,  மாநில அரசுகளைக் கண்டித்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் தக்கலையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

ரேஷன் கடையில் சர்க்கரை விலையை உயர்த்திய மத்திய,  மாநில அரசுகளைக் கண்டித்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் தக்கலையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு,  தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்  லாரன்ஸ் தலைமை வகித்தார். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் செல்வகுமார்,  பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார்,  ராபர்ட் ,  ராஜேஷ்,  சுமன்,  வட்டாரத் தலைவர் ஜான் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்டத் தலைவர் அசோகன்சாலமன், இளைஞர் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஜோன்ஸ் இம்மானுவேல்,  காங்கிரஸ் நகரத் தலைவர் ஹனுகுமார் ஆகியோர் பேசினர்.  இதில், நிர்வாகிகள் ஆனந்த் காரல்மார்க்ஸ், வேணு,  ராஜேஷ்குமார்,  ராசிக் அல் அஸின்,  ஜெகதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →