முகப்பு
கன்னியாகுமரி

பொய்கை அணை ஓடையில் கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேடு

ஆரல்வாய்மொழி பொய்கை அணை ஓடையில் கழிவுகள் தேங்குவதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

ஆரல்வாய்மொழி பொய்கை அணை ஓடையில் கழிவுகள் தேங்குவதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது.
ஆரல்வாய்மொழி பொய்கை அணையிலிருந்து பாசன பயன்பாட்டுக்காக குளங்களுக்கான நீர்வரத்து  ஓடை உள்ளது. இந்த ஓடையானது பொய்கை அணையிலிருந்து ஆரல்வாய்மொழி வடக்கூர் குடியிருப்பு வழியாக ஆரம்ப சுகாதார நிலையம்,  அரசு மேல்நிலைப் பள்ளியைக் கடந்து பெரியகுளத்தில் இணைகிறது.
பின்னர்,  கிளையாகப் பிரிந்து நாகர்கோவில் - காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலை,  குடியிருப்புப் பகுதிகளைக் கடந்து தெற்கு பகுதியில் உள்ள ராமர் குளத்துக்கு தண்ணீர் செல்கிறது.
இந்நிலையில்,  இந்த ஓடை முழுவதும் குப்பைகளும்,  சகதியுமாக சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  தற்போது மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், ஓடைக்கு நீர்வரத்து பாதிக்காத வகையில் தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →