முகப்பு
கன்னியாகுமரி

2 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய திருக்குறுங்குடி பெரியகுளம்

2 ஆண்டுகளுக்குப் பின் பருவமழையின் தொடக்கத்திலேயே திருக்குறுங்குடி பெரியகுளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

2 ஆண்டுகளுக்குப் பின் பருவமழையின் தொடக்கத்திலேயே திருக்குறுங்குடி பெரியகுளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி பெரியகுளத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்குளம் கடந்த 2015ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் போது டிசம்பர் 12ஆம் தேதி நிரம்பியது. அதன் பின் பருவமழை சரிவர பெய்யாததால் குளம் நிரம்பவில்லை. கடந்த ஓராண்டுக்கும் மேலாக குளம் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 வார காலமாக திருக்குறுங்குடி மலைப் பகுதியில் அவ்வப்போது பலத்த மழை பெய்தது. இதையடுத்து, குளத்திற்கு நீர்வரத்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழையால் திருக்குறுங்குடி பெரியகுளம் வியாழக்கிழமை நிரம்பியது.
இக்குளத்தின் மடைகள் கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. மழை தொடர்ந்தால் மடையில் பழுது ஏற்பட்டு தண்ணீர் வீணாகிச் செல்லும் அபாயம்  உள்ளது. இக்குளம் பருவமழைக் காலங்களில் நவம்பர் மாதம் 15ஆம் தேதிக்குப் பின்னர்தான் நிரம்பும். 2 ஆண்டுகளுக்குப் பின் நிகழாண்டில் பருவமழை தொடக்கத்திலேயே குளம் குளம் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் விவசாயப் பணிகளை உற்சாகத்துடன் தொடங்கியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →