கன்னியாகுமரி

குமரியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

DIN

கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகர்கோவில் அக்கறை அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பள்ளித் தாளாளர் ஜோசப் ரொமால்டு தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து உலகத்தைக் காப்போம், ஆரோக்கியமான சூழலை உருவாக்குவோம், குழந்தைகளை பாதுகாப்போம், பாலியல் வன்கொடுமைகளை தடுத்திடுவோம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையிலேந்தி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
அக்கறை அறக்கட்டளை சார்பில் சகுந்தலா, பள்ளித் தலைமை ஆசிரியை திரேஸ் தேன்மொழி, தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் அஜாஸ், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சுகந்தி, இளம் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் ஹெலன், சாரண, சாரணீயர் ஒருங்கிணைப்பாளர் வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT