அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு: தீர்வு காண கோரிக்கை
அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைக்கு விரைந்து தீர்வு காண கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைக்கு விரைந்து தீர்வு காண கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஐடியூ தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலர் எம். வல்சகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட வேண்டிய புதிய ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை மற்றும் ரப்பர் கழக நிர்வாகத்தின் முன்பு 20 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. எனவே, தமிழக முதல்வர் ரப்பர் கழதத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.