கன்னியாகுமரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார மாநாடு

DIN

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகஸ்தீசுவரம் வட்டார மாநாடு அஞ்சுகிராமத்தில் நடைபெற்றது.
வட்டாரக் குழு உறுப்பினர் சுப்பராம் தலைமை வகித்தார்.  எம்.கதிர்வேல் கொடியேற்றினார். அ.ஐயப்பன் தீர்மானம் நிறைவேற்றினார். எம்.ரகுநாதன் வரவேற்றார். மாவட்டச் செயலர் என்.முருகேசன் தொடக்கவுரையாற்றினார். வட்டாரச் செயலர் எஸ்.எஸ்.சந்திரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.
புதிய வட்டாரச் செயலராக எஸ்.எஸ்.சந்திரன் மற்றும் 9 பேர் கொண்ட புதிய வட்டாரக் குழு தேர்வு செய்யப்பட்டது.
சாமிதோப்பு பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பிலிருந்து காட்சி கோபுரம் வரை நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தடம் எண் 1 எப்,  2 இ,  2 எப்,  1 எம், 1 ஆர் ஆகிய பேருந்துகளை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இயக்க வேண்டும்.
காந்தி மண்டபம்,  காமராஜர் மண்டபம் பகுதியில் கழிப்பறை வசதி,  சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.செல்லப்பன் நிறைவுரையாற்றினார். வட்டாரக் குழு உறுப்பினர் எம்.மரிய ஜேம்ஸ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

SCROLL FOR NEXT