கன்னியாகுமரி

மனநலம் பாதித்தோரிடம் மனிதநேயம் காட்டுதல் அவசியம்: நீதிபதி ஜான். ஆர்.டி. சந்தோஷம்

DIN

மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ஜான்.ஆர்.டி.சந்தோஷம் அறிவுறுத்தினார்.
உலக மனநல தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கொட்டாரத்தை அடுத்த அச்சன்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் மனோலயா மனநலக் காப்பகம் சார்பில் மனநல தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நீதிபதி ஜான்.ஆர்.டி.சந்தோஷம் பேசியது: உலகில் மனநலம் குன்றியவர்கள் அதிகமானோர் உள்ளனர். இது ஒரு குறைபாடுதான்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பது என்பது கடினமான விஷயம். மனவளர்ச்சி குன்றியவர்களை நாம் வேறுவிதமாக நடத்தக்கூடாது. அவர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும்.
சமூகத்தில் மனவளர்ச்சி குன்றியவர்களைக் கண்டால் நாம் யாரும் கவலைப்படுவதில்லை. மாறாக ஓடி ஒளிந்து கொள்ளும் நிலைதான் உள்ளது. அவர்களையும் நம்மைப்போல் இயல்பான நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற விழிப்புணர்வு ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டும்.
உலக வரலாற்றை எடுத்துக் கொண்டால் புகழ்பெற்ற ஜூலியட்சீசரே மாற்றுத் திறனாளியாக இருந்தவர்தான்.
அதேபோல் ஏராளமானோர் பல்வேறு துறைகளில் உள்ளனர். இவர்களை நாம் மதிக்க வேண்டும். அவர்களிடம் இருந்து நாம் கற்றுகொள்ளவேண்டும். மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும். இது தொடர்பாக சட்ட ரீதியாக என்ன உதவிகள் வேண்டுமென்றாலும் இலவச சட்டமையத்தை அணுகினால் உதவ தயாராக உள்ளோம் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி பசும்பொன் ஷண்முகையா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் டாக்டர் கதிர்வேலு, மாவட்ட நன்னடத்தை அலுவலர் டாக்டர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பேசினர். மனோலயா இயக்குநர் மணிகண்டன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT