கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழியில் மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

DIN

ஆரல்வாய்மொழியில் மணல் கடத்தியதாக மூன்று லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 நாகர்கோவில் - ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் மைலாடி விலக்கு அருகே புவியியல் மற்றும் சுரங்க துறை  மதுரை மண்டல பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு லாரிகளை மறித்து சோதனையிட்ட போது,  அதில் உரிய ஆவனங்களின்றி மணல் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து  இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  இது போன்று தோவாளை அருகே நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, போலீஸாரை கண்டதும் லாரியை   அங்கேயே விட்டு  ஓட்டுநர் தப்பியோடி விட்டாராம். தொடர்ந்து லாரியை சோதனையிட்ட போது, அதில் அனுமதியின்றி மணல் கொண்டு வந்தது தெரியவந்ததாம். இதையடுத்து அந்த லாரி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT