கன்னியாகுமரி

ஊதிய உயர்வு வழங்கக் கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில்,  மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் மேற்பார்வை மின்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு,  குமரி மாவட்ட கிளைத் தலைவர் பி.குணசேகரன் தலைமை வகித்தார்.  மின்வாரிய ஊழியர்களுக்கு 2015 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை, இதர துறைகளோடு ஒப்பிட்டு கால தாமதம் செய்யாமல் தொழிற்சங்கங்களோடு கலந்து பேசி உடனடியாக ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், களப்பிரிவில் பல்லாயிரக்கணக்கான காலியிடங்களின் பணிகளை கூடுதலாக  செய்துவரும் களப்பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
செயலர் டி.செல்வதாஸ்,  சிஐடியூ மாவட்டத் துணைத் தலைவர் கே.செல்லப்பன்,   பொருளாளர் டி.ராஜகோபால், இணைச் செயலர் இர்வின்தாஸ்,  நாகர்கோவில் கோட்டத் தலைவர் டி.செந்தில்குமார்,  செயலர் ஜி.கிறிஸ்துதாஸ், தக்கலை கோட்டத் தலைவர் டி.சந்திரசேகர், செயலர் எம்.மோகன்தாஸ், குழித்துறை கோட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தன், செயலர் எஸ்.சுனில்குமார்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

SCROLL FOR NEXT