முகப்பு
கன்னியாகுமரி

டெங்கு தடுப்பு:தோவாளை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தோவாளை ஊராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்  சஜ்ஜன்சிங் ரா. சவாண் ஆய்வு செய்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

தோவாளை ஊராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்  சஜ்ஜன்சிங் ரா. சவாண் ஆய்வு செய்தார்.
 குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில்  டெங்கு கொசு ஒழிப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  
இந்நிலையில் வெள்ளிக்கிழமை   மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா. சவாண் தோவாளை ஊராட்சியில், தோவாளை வடக்கூர்  பிள்ளையார் கோயில் தெரு,  கிராமத்து தெரு, கிருஷ்ணன் கோயில்  ஆகிய  பகுதிகளில் பொது இடங்களில் கழிவு நீர் தேங்கிய பகுதிகளையும்,  வீடுகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளையும் ஆய்வு செய்தார்.
  அப்போது அப்பகுதி பொதுமக்கள் இப்பகுதியில் சரியான கழிவு நீர் ஓடைகள் இல்லாத காரணத்தால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது என்றனர்.   இதையடுத்து  ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  இதுகுறித்து  உடன் நடவடிக்கை எடுக்க  உத்தரவு பிறப்பித்தார்.
ஆய்வின்போது சுகாதார ப்பணிகள் துணை இயக்குநர் மதுசூதனன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரோசிட்டா , சுகாதார மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், தோவாளை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அனிட் கிப்சன், வருவாய் ஆய்வாளர் கணேசப் பெருமாள் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →