முகப்பு
கன்னியாகுமரி

கொச்சியில் மாயமான 3 மீனவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தல்

கேரளமாநிலம் கொச்சியில் கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் மாயமான  3 மீனவர்களை  கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மாவட்ட 

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

கேரளமாநிலம் கொச்சியில் கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் மாயமான  3 மீனவர்களை  கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மாவட்ட  மீனவப்பேரவைத் தலைவர்   ஜோர்தான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த ஆன்றனி(35), சேவியர்(40), ரம்யான்(41) திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்(32),  கேரளத்தைச் சேர்ந்த பிரின்ஸ்(40),  ஜாண்சன்(45) ஆகியோர்  கடந்த வாரம் ஆழ்கடலில்  மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது கேரளம் கொச்சி ஆழ்கடலில்  இவர்கள் சென்ற படகில் கப்பல் மோதி விபத்துக்குள்ளனது. இதில் ஆன்றணி இறந்தார். அவரது சடலம் மீட்கப்பட்டது. சேவியர், கார்த்திகேயன் ஆகிய இருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர். பிரின்ஸ், ஜான்சன், ரம்யான் ஆகிய 3 பேர் மாயமாகியுள்ளனர்.
 இந்த 3 மூன்று மீனவர்களையும் உடனடியாக   மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த ஆன்றணி குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10    லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →