முகப்பு
கன்னியாகுமரி

தக்கலை அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

தக்கலை அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

தக்கலை அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகே மேல்பாறையைச் சேர்ந்தவர் சைமன், (32).   இவர் வெள்ளிக்கிழமை  காலை தேங்காய்பட்டினத்திலிருந்து  கன்னியாகுமரி செல்லும்  அரசுப் பேருந்தை ஓட்டி வந்தார். தக்கலையை அடுத்த பூக்கடை பகுதியில் பேருந்து வந்தபோது, பைக்கில் வந்த 2 இளைஞர்கள் பேருந்தின் ஓட்டுநரை   திட்டி தகராறு செய்தனராம்.  பேருந்தில் அதிக பயணிகள் கூட்டம் இருந்ததால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றாராம்.
இந்நிலையில், திருவிதாங்கோடு அமராவதிகுளம் வரை, சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுவில் இளைஞர்கள் 2 பேரும் பேருந்து மீது கல்லை வீசினராம் .  இதில்  கல் பேருந்தின் பக்கவாட்டில் பட்டதால், பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து ஓட்டுநர் சைமன், பேருந்தை  தக்கலை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினார். அங்கிருந்து மாற்று பேருந்தில் பயணிகள் அனுப்பப்பட்டனர்.
இது குறித்து சைமன் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →