கன்னியாகுமரி

கருங்கல், வேங்கோடு வட்டார கத்தோலிக்க சங்கக் கூட்டம்

கருங்கல்,  வேங்கோடு வட்டார கத்தோலிக்க சங்க அமைப்புக் கூட்டம் புதுக்கடையில் நடைபெற்றது.

DIN

கருங்கல்,  வேங்கோடு வட்டார கத்தோலிக்க சங்க அமைப்புக் கூட்டம் புதுக்கடையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கத்தோலிக்க சங்க குழித்துறை மறைமாவட்டத் தலைவர் பிரைட் சேவியர் தலைமை வகித்தார். மறைமாவட்ட இயக்குநர் டோமினிக் கடாட்சதாஸ்,  வேங்கோடு வட்டார முதன்மை அருள்பணியாளர் பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறைமாவட்டச் செயலர் ஆனி ஜீவரேகா வரவேற்றார். புத்தன்கடை வட்டாரச் செயலர் கிறிஸ்டல் அமுதா,  மாத்திரவிளை வட்டாரச் செயலர் பயஸ், மார்த்தாண்டம் வட்டாரத் தலைவர் ராஜேந்திரபாபு,  முளகுமூடு வட்டாரச் செயலர் ராஜேந்திரராஜ் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், வட்டாரத் தலைவராக அமலதாஸ், செயலராக லூனா,  பொருளாளராக ஆனந்த், துணைத் தலைவராக கிறிஸ்டோபர்,  துணைச் செயலராக சேம்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மறைமாவட்டத் தலைவர் பிரைட் சேவியர்,  பொருளர் ஜெஸ்டின் ராஜ்,  காரங்காடு வட்டாரத் தலைவர் அருள்தாஸ்,  செயலர் ஜெஸ்டஸ் ரோக் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மறை மாவட்ட துணைத் தலைவர் ரைமண்ட் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஹைதராபாத் வந்த 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மக்களவையில் நாளை எஸ்ஐஆர் விவாதம்! ராகுல் தொடக்கி வைக்கிறார்!

போதிய ஆதாரம் இல்லை! நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை!!

இந்தியா வருகிறார் உக்ரைன் அதிபர்!

SCROLL FOR NEXT