கன்னியாகுமரி

அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள்

DIN

கன்னியாகுமரி மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில் வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பாரம்பரிய கலைப் போட்டிகள் நடைபெற்றன.
நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை கலாஉத்சவ் என்ற திட்டத்தை 2015 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். இசை, நடனம், நாடகம் மற்றும் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
கல்வி மாவட்ட அளவில் பரிசு பெற்ற மாணவர்கள், வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியிலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு குமரி மெட்ரிக் பள்ளியிலும் நடைபெற்றது.
அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், குமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான பாலா, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளிவேலு ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், ஆறுமுகம், கார்த்திக் ஆகியோர் போட்டிகளை நடத்தினர். வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில் எஸ்.எம் மெட்ரிக் பள்ளி, மயிலாடி அமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தக்கலை பிராவிடன்ஸ் மேல்நிலைப் பள்ளி, குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT