கன்னியாகுமரி

வழுக்கம்பாறையில் மலைப்பாம்பு மீட்பு

DIN

கொட்டாரத்தை அடுத்த வழுக்கம்பாறை பகுதியில் கழிவுநீர் ஓடையில் இருந்து 10 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் சனிக்கிழமை பிடித்தனர்.
வழுக்கம்பாறையை அடுத்த சிதம்பரபுரம் கிறிஸ்தவ ஆலயம் அருகில் உள்ள கழிவுநீர் ஓடையிலிருந்து இரைச்சல் சப்தம் வந்ததைக் கேட்டு அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது மலைப்பாம்பு ஒன்று இருந்தது தெரியவந்ததாம்.
இதையடுத்து பொதுமக்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி குமரேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கழிவுநீர் ஓடையில் பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு அடர்ந்த வனப் பகுதிக்குள் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT