முகப்பு
கன்னியாகுமரி

கேரளத்துக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் பச்சரிசி,  கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை போலீஸார்  ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:23 AM
பகிர்:

கேரளத்துக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் பச்சரிசி,  கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை போலீஸார்  ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தக்கலை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான போலீஸார் புலியூர்குறிச்சி அருகே  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நாகர்கோவிலிலிருந்து வந்த லாரியை தடுத்து நிறுத்தியபோது லாரி ஓட்டுநர் சிறிது தொலைவு தள்ளி நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.  போலீஸார் லாரியை சோதனையிட்டபோது   சாக்குமூட்டைகளில் 4 டன் ரேஷன் பச்சரிசி இருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அரிசியுடன் லாரியை போலீஸார் பறிமுதல் செய்து தக்கலை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.  இதுகுறித்து போலீஸார் கூறுகையில், நாகர்கோவில்  உணவு தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துளோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.