முகப்பு
கன்னியாகுமரி

கேரளத்துக்கு  மண்ணெண்ணெய் கடத்த முயன்ற வேன் விபத்தில் சிக்கியது

கருங்கல் அருகே தாழக்கன்விளை பகுதியில்  திங்கள்கிழமை கேரளத்துக்கு மண்ணெண்ணெய் கடத்திச் சென்ற வேன் விபத்துக்குள்ளானது.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 4:51 AM
பகிர்:

கருங்கல் அருகே தாழக்கன்விளை பகுதியில்  திங்கள்கிழமை கேரளத்துக்கு மண்ணெண்ணெய் கடத்திச் சென்ற வேன் விபத்துக்குள்ளானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் வந்த  ஒரு சொகுசு வேன் முள்ளங்கனாவிளையிலிருந்து கிள்ளியூரை நோக்கி வேகமாக சென்றபோது, தாழக்கன்விளை பகுதியில் உள்ள ஒரு மதில் சுவர் மீது மோதிய நின்றது.  இதையடுத்து, அப்பகுதியினர் வேன் முன் திரண்டனர்.இதனைகண்ட ,வேன்ஓட்டுநர் தப்பி ஓடி விட்டாராம். அங்கு திரண்ட பொதுமக்கள், வேனை சோதனை செய்தபோது அதில் 21 கேன்களில் 400 லிட்டர் மண்ணெண்ணெய்  இருந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த பறக்கும்படை வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையிலான குழுவினர் மண்ணெண்ணையை கைப்பற்றி தூத்தூரில் உள்ள மண்ணெண்ணை கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.  மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.