சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தி காங்கிரஸார் உண்ணாவிரதம்
சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், தலித் மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த தவறிய பாஜக அரசை கண்டித்தும்,
சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், தலித் மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த தவறிய பாஜக அரசை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை தக்கலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். இதில், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ. திருச்சி வேலுசாமி, நகரத் தலைவர் ஹனுகுமார், வட்டாரத் தலைவர்கள் ஜாண்கிறிஸ்டோபர், ஜெகன்ராஜ், காஸ்டல் கிளிஸ்டஸ், டென்னிஸ், பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.ஏ. கான், டைட்டஸ், டாக்டர் தம்பி விஜயகுமார் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.