கன்னியாகுமரி

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

DIN

நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில்  ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே  வழங்கினார்.
கன்னியாகுமரி  மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்,  நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில்பெறப்பட்ட 62 மனுக்கள் மீது  உடனடி நடவடிக்கை  மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.  மேலும்,  4  பேருக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் பார்வையற்றோர் சாலையில் நடக்கும் போது எதிர்வரும் பொருள்களை மின் அதிர்வலைகள் மூலம் கண்டறியும் மடக்கு குச்சிகளை ஆட்சியர் வழங்கினார். 
கூட்டத்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் து. கதிர்வேலு, அரசு துறை அலுவலர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT