முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல்

கொல்லங்கோடு அருகே முன்விரோதம் காரணமாக 3 பெண்கள், 2 குழந்தைகளைத் தாக்கியதாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 6:58 am IST
பகிர்:

கொல்லங்கோடு அருகே முன்விரோதம் காரணமாக 3 பெண்கள், 2 குழந்தைகளைத் தாக்கியதாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கொல்லங்கோடு அருகேயுள்ள சூசைபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் (42). மீன்பிடி தொழிலாளி. இவரது மகளை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்ந்து கேலி செய்து வந்ததாராம். இதுகுறித்து வின்சென்ட் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து அப்பகுதியைச் சேர்ந்த மோயிஸ் மகன் ரோஷன் (27) என்பவரை அண்மையில் கைது செய்தனர். 
இதனால், இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், வின்சென்டின் உறவினர்கள் விஜயராணி, லூர்துமேரி, புஸ்பராணி மற்றும் 2 குழந்தைகளுடன் அவரது வீட்டினருகே திங்கள்கிழமை நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மோயிஸ், பிரான்சிஸ் ஆகியோர் அவர்களிடம் தகராறு செய்து, தாக்கினராம். இதில், காயமடைந்த இரு குழந்தைகள் உள்பட 5 பேரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான மோயிஸ், பிரான்சிஸ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.