துவரங்காடு பகுதியில் பாஜகவினர் தூய்மைப் பணி
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், துவரங்காடு பகுதியில் பாஜக சார்பில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், துவரங்காடு பகுதியில் பாஜக சார்பில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
அம்பேத்கரின் 127ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, பாஜகவின் குமரி மாவட்ட அமைப்புசாரா தொழில்பிரிவு தலைவர் ஏ.சிவகுமார் தலைமையில் இப்பணி நடைபெற்றது. சாலைகள் மற்றும் பொதுஇடங்கள் சுத்தம் செய்யப்பட்டன.
இதில், குமரி மாவட்ட பாஜக பொதுச்செயலர் ஜெயஸ்ரீ வி. மணிசுவாமிகள், பூதப்பாண்டி சண்முகம், லார்சன், கோலப்பன், அருள், நாகராஜன், முத்து, கார்த்திக், கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கிராத்தூர் கோயிலில்...
நித்திரவிளை அருகேயுள்ள கிராத்தூர் மகாதேவர் கோயில் வளாகத்தில் ஏழுதேசம் மண்டல பாஜக சார்பில் புதன்கிழமை தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏழுதேசம் மண்டல பாஜக தலைவர் ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், கிளைத் தலைவர் வினோத் முன்னிலை வகித்தார். மண்டல இளைஞரணித் தலைவர் ரவீந்து, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் சுபின் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.