கன்னியாகுமரி

மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று சிறப்பு குறைதீர் முகாம்

DIN

கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கோட்ட அளவிலான சிறப்பு குறைதீர் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (பிப். 14) நடைபெற உள்ளது.
பத்மநாபபுரம் சார் ஆட்சியர் தலைமையில் மாலை 3 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்தில்,  ஆட்சியர்  மற்றும் சார் ஆட்சியர் தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற உள்ளனர். இந்த மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் இந்த சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று பயனடைய வேண்டும். 
ஏற்கெனவே, செவ்வாய்க்கிழமை நடைபெற வேண்டிய மாதாந்திர குறைதீர் கூட்டம், உள்ளூர் விடுமுறை காரணமாக அடுத்த வார செவ்வாய்க்கிழமைக்கு ( பிப். 20) மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT