கன்னியாகுமரி

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

DIN

அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வை கண்டித்து, நாகர்கோவிலில் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தலைவர் எம். தாமஸ் தலைமை வகித்தார். இதில், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு மைய பொதுச் செயலர் சிதம்பரம்பிள்ளை, பொருளாளர் சொரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மலர் மகளிர் அமைப்பு தலைவர் ஷெலின்மேரி, செயற்குழு உறுப்பினர் கஸ்தூரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
களியக்காவிளையில்...
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி சார்பில் களியக்காவிளையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப் போராட்டத்துக்கு கட்சியின் குமரி மேற்கு மாவட்டத் தலைவர் ஏ. ஜெயராஜ்நாடார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் கொடுங்குளம் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கட்சியின் நிறுவனர் - தலைவர் பழவார் தங்கப்பன் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
இதில், கட்சியின் விளவங்கோடு தொகுதி அமைப்பாளர் ரமேஷ்குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் பால்ராஜ், ஜெ. ஜாண் ஜஸ்டின்ராஜ், மாவட்ட மகளிரணி தலைவி ஆரோக்கிய கிராஸ்பின், விளவங்கோடு ஊராட்சி மகளிரணி அமைப்பாளர் சாந்தா, குழித்துறை நகர மகளிரணி அமைப்பாளர் சாவித்ரி, கட்சியின் குழித்துறை நகரத் தலைவர் வாவனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்தும், பேருந்து கட்டணத்தை உடனே குறைக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT