முகப்பு
கன்னியாகுமரி

செம்மொழி மத்திய நிறுவன  ஆட்சிக்குழு உறுப்பினர் நியமனம்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்  வீ. வேணுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்  வீ. வேணுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தமிழ் உயராய்வுக்காக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது . இது தமிழ் உயராய்வுக்காகப் பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் தமிழாய்வு தொடர்பான பல்வேறு கருத்தரங்குகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்துவதோடு பல்வேறு ஆய்வு பட்டங்களுக்காக ஆய்வாளர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கி வருகின்றது. 
மேலும் தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, கலைஞர் மு. கருணாநிதி விருது என பல விருதுகளையும் சிறந்த தமிழ் ஆய்வாளர்களுக்கு வழங்கி வருகின்றது.  இச்செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் வேணுகுமாரை  கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவர் ஆறுமுகம் பிள்ளை, முதல்வர் சிதம்பரதாணு மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

முழு கட்டுரையைப் படிக்க →