முகப்பு
கன்னியாகுமரி

நாகர்கோவிலில் மறியல்: 120 பேர் கைது

குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள காவல்துறை பாதுகாப்பை விலக்க வலியுறுத்தி கிறிஸ்தவ சேனை அமைப்பினர் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள காவல்துறை பாதுகாப்பை விலக்க வலியுறுத்தி கிறிஸ்தவ சேனை அமைப்பினர் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
அகில இந்திய கிறிஸ்தவ சேனை அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தலைவர் தியோடர்சேம் தலைமை வகித்தார்.  மாவட்டத் தலைவர்கள் பீட்டர்,ஈசாக், செயலர் சாலமோன் பொருளாளர் ஜான் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதைத்தொடர்ந்து துணைக்காவல் கண்காணிப்பாளர் கோபி தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட 63   பெண்கள் உள்பட 120  பேரை கைது செய்தனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →