கன்னியாகுமரி

பண மோசடி: இருவர் மீது வழக்கு

DIN

கொல்லங்கோடு அருகே இளைஞருக்கு வெளிநாட்டில் வேலைக்கு வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசரித்து வருகின்றனர்.
கொல்லங்கோடு சூரியகோடு பகுதியைச் சேர்ந்தவர் சண்ணி (28). மரைன் டெக்னாலஜி பட்டய படிப்பு படித்துள்ள இவர் வேலை தேடி வந்தாராம். காஞ்சாம்புறம் இடைத்தெங்கு பகுதியைச் சேர்ந்த கோபி, ஏலூர்முக்கு கைதறவிளையைச் சேர்ந்த சதீஷ் ஆகியோர் சண்ணியை அணுகி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ. 4 லட்சம் வரை செலவு ஆகும் என தெரிவித்தனராம்.
சண்ணி தன்னிடம் பணம் இல்லையென கூறியதையடுத்து சொத்து பத்திரத்தை பெற்றுக்கொண்டு அதை மற்றொரு நபரிடம் அடமானமாக வைத்து ரூ. 2 லட்சம் பெற்றுச் சென்றனராம். நீண்ட நாள்களாகியும் வேலைக்கு வெளிநாட்டுக்கு அனுப்பவில்லையாம். சொத்து பத்திரத்திரம் அடமானம் வைத்து பெற்ற பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லையாம். மேலும் பணத்தை திருப்பி கேட்டதால் கோபி, சதீஷ் ஆகியோர் சண்ணியை மிரட்டினராம்.
இது குறித்து சண்ணி அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸார் கோபி, சதீஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT