கன்னியாகுமரி

மாற்றுத் திறனாளிகளுக்கு தையல் இயந்திரம்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் புரிய உதவிடும் வகையில் இரு கைகளும் நல்லநிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறளாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, இரு கைகளும் நல்லநிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறளாளிகள் இதுவரை தையல் இயந்திரம் பெறாதவர்களாக இருந்தால் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று மற்றும் தையல் தெரியும் என சான்று அல்லது தையல் கலை பயின்றதற்கான சான்று ஆகிய சான்றிதழ்களின் நகல்களோடு பிப்.9 ஆம் தேதிக்குள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT