முகப்பு
கன்னியாகுமரி

குமரியிலிருந்து  கேரளத்துக்கு கடத்த முயன்ற  1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாகர்கோவிலில் பேருந்துகள் மூலம் கேரளத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

நாகர்கோவிலில் பேருந்துகள் மூலம் கேரளத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து, கேரள மாநிலத்துக்கு அரசுப் பேருந்து மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக,  ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, அகஸ்தீசுவரம் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டியம்மாள் தலைமையில் வருவாய் ஆய்வாளர் அனந்தகோபால்,  உதவியாளர் ரஞ்சித் ஆகியோர் நாகர்கோவிலில் மீனாட்சிபுரம்,  வடசேரி பேருந்து நிலையம்,  கிருஷ்ணன்கோவில் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். 
அப்போது சாக்கு மூட்டைகளில் கட்டி பேருந்துகள் மூலம் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசி,  கோதுமையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  அரசுப் பேருந்து மூலம் ரேஷன் அரிசியை கடத்த முயற்சித்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →