முகப்பு
கன்னியாகுமரி

100  நாள் வேலைத் திட்டத்தில்  பணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத்திட்டத்தில்  அனைத்துத் தொழிலாளர்களுக்கு பணி வழங்கக் கோரி நாகர்கோவிலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

நூறு நாள் வேலைத்திட்டத்தில்  அனைத்துத் தொழிலாளர்களுக்கு பணி வழங்கக் கோரி நாகர்கோவிலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு,  மாவட்டச் செயலர் மலைவிலைபாசி தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஆர்.செல்லசுவாமி கோரிக்கை விளக்கிப் பேசினார்.
நூறு நாள் வேலைக்கு வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும்.   அரசு அறிவித்துள்ள தினக்கூலி ரூ. 205  ஐ குறைக்காமல் வழங்க வேண்டும்,  ஊதிய பாக்கிகளை உடனே வழங்க வேண்டும்,  நீர் நிலைகள், ஓடைகள், குளங்கள், புதுச்சாலைசள் அமைக்க ஊராட்சிகளில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில்,  எஸ்.எஸ்.சந்திரன்,  கி.சிவானந்தம்,  எம்.ஷாகுல்ஹமீது,  கே.எஸ்.லட்சுமி, சுயம்புகனி, டி.பேபி, கிருஷ்ணதாஸ், வேலப்பன், கங்காதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலர் வி.அமிர்தலிங்கம் நிறைவுரையாற்றினார்.

முழு கட்டுரையைப் படிக்க →