முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்ட மாணவர்களுக்கு  விழிப்புணர்வு சுற்றுலா

கன்னியாகுமரி மாவட்ட  பள்ளி  மாணவர்,  மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவை கூடுதல் ஆட்சியர் ராஹூல்நாத்,  நாகர்கோவில்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட  பள்ளி  மாணவர்,  மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவை கூடுதல் ஆட்சியர் ராஹூல்நாத்,  நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியிலிருந்து கொடியசைத்து புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியில்,  அவர் பேசியதாவது:
 தமிழ்நாட்டில்  உள்ள 32 மாவட்டங்களிலுள்ள பள்ளி மாணவர்,  மாணவிகளுக்கு முக்கிய சுற்றுலா தலங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த "ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவை நடத்த சுற்றுலாத்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.  
அதன்படி,  கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் நன்கு பயிலும் கிராமப்புற சிறந்த ஏழை,  எளிய மாணவர், மாணவிகள் 150 பேர் முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு "ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா'வாக கூந்தன்குளம்- பறவைகள் சரணலாயம்,  கிருஷ்ணபுரம் - சிற்ப கோயில்,  திருநெல்வேலி - அறிவியல் மையம் மற்றும் அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆகிய இடங்களுக்கு சுற்றுலாத்துறை சார்பாக அழைத்து செல்லப்படுகிறார்கள்.  இச்சுற்றுலா பிப். 28  ஆம் தேதி (புதன்கிழமை)  நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளியிலிருந்து தொடங்கிவைக்கப்பட்டது.  சுற்றுலாவில் கலந்து கொள்ளும் மாணவர்,  மாணவிகளுக்கு பேருந்து வசதி, காலை உணவு, தேநீர், மதிய உணவு,  மாலை பிஸ்கெட் தேநீர்,  மற்றும் நினைவு பரிசு ஆகிய அனைத்து வசதிகளும் சுற்றுலாத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   மேலும், சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு சுற்றுலா தொடர்பான விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்  என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →