முகப்பு
கன்னியாகுமரி

கண்ணனுர் ஊராட்சியில்  திமுக ஆர்ப்பாட்டம் 

திருவட்டாறு  ஒன்றியம், கண்ணனூர் ஊராட்சி  நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து திமுக சார்பில், செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On : 29 மார்ச், 2018 at 5:51 AM
பகிர்:

திருவட்டாறு  ஒன்றியம், கண்ணனூர் ஊராட்சி  நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து திமுக சார்பில், செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 ஆர்ப்பாட்டத்தில், "ஊராட்சியில்  பல மாதங்களாக  எரியாமல் உள்ள  தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும்;   மேல்நிலை  நீர்த்தேக்க தொட்டிகளைப் பராமரித்து, சுத்தம் செய்ய வேண்டும்; ஊராட்சிக்குட்பட்ட அனைத்து  சாலைகளையும் சீரமைக்க வேண்டும்; ஒக்கி புயலில் சாய்ந்து  வீடுகளின் மேல் விழுந்து கிடக்கும் அரசுக்கு  சொந்தமான மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  
கண்ணனூர் ஊராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்தை குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.  ஊராட்சி தி.மு.க. செயலாளர் ஜெயதேவ்ராஜ் தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜாண்பிரைட், திருவட்டாறு ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன்,  ஒன்றியப் பிரதிநிதி தொபியாஸ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பேச்சாளர்கள் என்.ஆர்.மணி,  சிலம்பை டென்னிசன்,  குமரி  மேற்கு மாவட்ட தொண்டரனி துணை அமைப்பாளர் லெனின், ஏற்றக்கோடு ஊராட்சி செயலர் ஜோன்ஸ்,   தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் வின்சர்,  திருவட்டாறு ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர்  ஜெரோம்,  மாவட்ட இலக்கிய அணி தலைவர் மரிய சிசுகுமார், வர்க்கீஸ் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.